/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் பூஜை பொருட்கள்; ஓட்டுநர்கள் அவதி
/
ரோட்டில் பூஜை பொருட்கள்; ஓட்டுநர்கள் அவதி
ADDED : ஜன 23, 2024 11:51 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவில் இருந்து, தேவராடிபாளையம் செல்லும் ரோட்டில் பூஜை செய்த பொருட்கள் போட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகில், கோதவாடி, தேவராடிபாளையம் மற்றும் இம்மிடிபாளையம் செல்லும் இணைப்பு ரோடு உள்ளது. இந்த ரோட்டில், நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த ரோட்டில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இந்நிலையில், சிலர் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு காலி மது பாட்டிலை வீசி செல்வதும், சிலர் பூஜை செய்த பொருட்களை ரோட்டில் போடுவதும் அதிகரித்து வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், இந்த ரோட்டில் செல்ல அச்சப்படுகின்றனர். ரோட்டில் பூஜை பொருட்கள் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, ரோட்டில் வீசப்படும் மது பாட்டில்கள் மற்றும் பூஜை பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

