/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் ஊழியர்களின் போஸ்டல் பொங்கல்!
/
தபால் ஊழியர்களின் போஸ்டல் பொங்கல்!
ADDED : ஜன 13, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள, தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியர்கள், 'போஸ்டல் பொங்கல்' என்ற பெயரில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
ஊழியர்கள் எட்டுக்குழுக்களாக பிரிக்கப்பட்டு, பொங்கல் வைக்கும் போட்டி நடந்தது. இதில் கோவை கோட்ட அலுவலக ஊழியர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து பழனி பாதயாத்திரை குழு சார்பில், ஜமாப் இசை நிகழ்ச்சி நடந்தது. ஆண்களுக்கு உரியடி போட்டி நடந்தது.
இறுதியாக, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நடந்தது. பரிசுகளை மண்டல அலுவலக கணக்கு அதிகாரிகள் கிறிஸ்டி, நித்யா, உதவி இயக்குனர்கள் ஜெயகீதா, கமலேஷ் வழங்கினர்.

