/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
/
ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
ஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
ADDED : ஜூன் 14, 2025 11:33 PM
கோவை: கோவையில் செயல்படும், பெரும்பாலான அரசு மற்றும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக, சேர்க்கை பெற்ற மாணவர்கள் பலர், மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
மாவட்டத்தில், 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட மொத்தம் 598 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி. மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆரம்பப்பள்ளிகளில் போதிய அளவில் நியமிக்கப்படாததால், கற்றல் பாதிக்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தாங்கள் மேற்கொண்ட மாணவர் சேர்க்கை ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வீணாகி வருவதாக ஆசிரியர்கள் கூறினர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர், ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இரண்டு ஆசிரியர்களே, அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் நிலை உள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விக்கும், ஒருவரே பாடம் எடுக்கும் சூழல் உள்ளது. இது மாணவர்களின் கற்றல் தரத்தை பாதிப்பதாக கருதும்பெற்றோர், டி.சி., பெற்றுச் செல்கின்றனர்.
பள்ளி மேலாண்மை குழு வாயிலாக,ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்தாலும், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதிலும், அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.