
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கணேசன், வட்டார தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், அசாம் மாநிலத்தில் யாத்திரை சென்ற எம்.பி., ராகுல் பயணம் செய்த பஸ்சை வழிமறித்து தாக்குதல் நடத்தியதாகவும், அசாம் மாநில பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

