/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்துார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
புத்துார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 24, 2024 01:14 AM

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே உள்ள கணுவாய்பாளையம் அம்மன் நகர் பகுதியில் அருள்தரும் புத்தூர் அம்மன் கோவில் உள்ளது.
அண்மையில் கோவிலின் கருவறை, விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. பணிகள் நிறைவுற்ற நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை அமைக்கப்பட்டு முதலாம் கால வேள்வி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து இரண்டாம் கால, மூன்றாம் கால பூஜைகள், காப்பு அணிவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில், சாந்தலிங்க அருள்நெறி மன்றம் குழந்தைவேல், சக்திவேல், உள்ளிட்டோர் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.--

