/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எம்.ஜி.ஆரை கேவலமாக பேசிய ராஜாவை ஓட ஓட விரட்ட வேண்டும்'
/
'எம்.ஜி.ஆரை கேவலமாக பேசிய ராஜாவை ஓட ஓட விரட்ட வேண்டும்'
'எம்.ஜி.ஆரை கேவலமாக பேசிய ராஜாவை ஓட ஓட விரட்ட வேண்டும்'
'எம்.ஜி.ஆரை கேவலமாக பேசிய ராஜாவை ஓட ஓட விரட்ட வேண்டும்'
ADDED : பிப் 01, 2024 11:06 PM

மேட்டுப்பாளையம்:'எம்.ஜி.ஆரை, கேவலமாக பேசிய, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவை, வருகிற லோக்சபா தேர்தலில், ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும், என, முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், தி.மு.க.,அரசை கண்டித்து, அ.தி.மு.க.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., செல்வராஜ்,மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் நாசர், ஒன்றிய, நகர செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., வினருக்கு கூட பாதுகாப்பு இல்லை. மோசமான ஆட்சி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் அதிக வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன.
அ.தி.மு.க.,வினர் எம்.ஜி. ஆரையும், ஜெயலலிதாவையும் கடவுளாக நினைக்கின்றனர். எம்.ஜி.ஆரை, கேவலமாக பேசிய, நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவுக்கு, நாம் பாடம் புகட்ட, வருகிற லோக்சபா தேர்தலில் ஓட ஓட அவரை விரட்ட வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று, நியாயம் கேட்கச் சென்ற, மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் கவுன்சிலர், கட்சியினர் மீது பொய் வழக்கு போட்ட, நகராட்சி நிர்வாகமும், போலீசும் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.
இவ்வாறு வேலுமணி பேசினார்.

