/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ராமர் சரித்திர நாட்டிய நாடகம்
/
கோவையில் ராமர் சரித்திர நாட்டிய நாடகம்
ADDED : ஜன 20, 2024 08:38 PM
கோவை;அயோத்தியில் ராமர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை தொடர்ந்து, கோவை ராமர் கோவிலில், லாவண்யா சங்கர் மற்றும் பவித்ரா சீனிவாசன் குழுவினரின். ராமர் சரித்திர நாட்டிய நாடகம் நடக்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், 500 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில், நாளை கோவை ராம்நகரிலுள்ள கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், அதிகாலை முதல் இரவு வரை பிரம்மாண்ட திருவிழாவாக விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 6:00 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை விஷ்ணுசகஸ்ர நாமபாராயணம், ராமநாமசங்கீர்த்தனம்.
சீதாராமர் திருக்கல்யாண மஹோற்சவம், ஸ்ரீ கார்த்தி ஞானேஸ்வர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், வேதபண்டிதர்களின் வேதகோஷ முழக்கமும் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு தர்மதீபம் ஏற்றும் வைபவம், 2,008 விளக்குகள் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பக்தர்கள் ஏற்றி வைக்கின்றனர். மாலை 6:20 மணிக்கு சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ராமர் கோவில் மண்டபத்தில், மாலை 6:30 மணிக்கு ராமர் சரித்திர நாட்டிய நாடகம் பவித்ரா சீனிவாசன் மற்றும் லாவண்யா சங்கர் குழுவினரால் அரங்கேற்றப்படுகிறது.
இதில், ராமர் பிறப்பு, பாலபருவம், வனவாசம், அரியனை ஏறுதல், பட்டாபிஷேகம், சீதாதேவி, குழந்தைகள் லவன், குஷன் ஆகியோருடன் இருப்பது, அக்னிப்பிரவேசம் செய்தல் போன்ற நிகழ்வுகள் நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.
பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என, ராமர் கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

