/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்குரு சேவாஸ்ரமத்தில் ராம காதை நடன நிகழ்ச்சி
/
சத்குரு சேவாஸ்ரமத்தில் ராம காதை நடன நிகழ்ச்சி
ADDED : ஜன 23, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;அயோத்தி பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டில் அமைந்துள்ள, சத்குரு சேவாஸ்ரமத்தில் பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து, ஆவராம்பாளையம் இளங்கோ நகர் சீர்காழி மாரியம்மன் கலைக் குழுவினரின் ராம காதை நடன நிகழ்ச்சியும், கேரள குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த வாண வேடிக்கை, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

