/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு ரோடு சீரமைக்க தயக்கம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
/
சோலையாறு ரோடு சீரமைக்க தயக்கம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
சோலையாறு ரோடு சீரமைக்க தயக்கம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
சோலையாறு ரோடு சீரமைக்க தயக்கம்; வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
ADDED : செப் 25, 2025 11:49 PM

வால்பாறை;வால்பாறை சோலையாறு செல்லும் ரோடு சீரமைக்க தயக்கம் காட்டுவதால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரிலிருந்து நல்லகாத்து வழியாக சோலையாறு செல்லும், 3 கி.மீ., துாரம் உள்ள ரோடு, கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த ரோட்டில் முக்கியமான கோவில்கள், நல்லமுடி காட்சி முனை, சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த ரோட்டை சீரமைக்க கோரி, மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறிப்பு அப்பகுதி மக்கள் கூறியதாவது: வால்பாறையிலிருந்து சோலையாறு வழியாக முடீஸ் பகுதிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன.
தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான 3 கி.மீ., துாரம் உள்ள ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். ரோடு கரடு, முரடாக உள்ளதால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே வால்பாறை நகராட்சி சார்பில் சோலையாறு எஸ்டேட் ரோட்டை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சோலையாறு எஸ்டேட் ரோட்டை சீரமைக்க, அந்த எஸ்டேட் நிர்வாகம் நகராட்சிக்கு தடையின்மை சான்று வழங்கியுள்ளது. சோலையாறு, கல்லாறு ரோடு சீரமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. இதே போல் வில்லோனி மருத்துவமனைக்கு செல்லும் ரோடும் விரைவில் சீரமைக்கப்படும். மாவட்ட கலெக்டர் ஒப்புதல் வந்த பின், மன்றக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் ரோடு சீரமைக்கப்படும்' என்றனர்.