/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில் ரூ.135 கோடி நிதி; குப்பை மேலாண்மைக்கு மாநகராட்சி முனைப்பு
/
'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில் ரூ.135 கோடி நிதி; குப்பை மேலாண்மைக்கு மாநகராட்சி முனைப்பு
'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில் ரூ.135 கோடி நிதி; குப்பை மேலாண்மைக்கு மாநகராட்சி முனைப்பு
'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில் ரூ.135 கோடி நிதி; குப்பை மேலாண்மைக்கு மாநகராட்சி முனைப்பு
ADDED : ஜன 19, 2024 04:30 AM
கோவை : குப்பை மேலாண்மைக்கென 'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில் ரூ.135 கோடி நிதி பெற விண்ணபித்துள்ளதுடன், அனைத்து எம்.சி.சி., மையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகாரமாகிறது. இக்குப்பையானது வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டதால் சுற்றுப்பகுதிகளில் வசிப்பவர்கள் சுகாதார சீர்கேடு பிரச்னைக்கு ஆளாகிவருகின்றனர்.
பிரச்னை தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடந்துவருகிறது.இதையடுத்து, குப்பை மேலாண்மையை மேம்படுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒரு பகுதியாக 'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில், 250 டன் அளவு காய் கறி உள்ளிட்ட கழிவில் இருந்து 'பயோ காஸ்' தயாரித்து தெரு விளக்கு போன்றவற்றுக்கு மின்சாரமாக பயன்படுத்தும் விதமாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு நிதி கிடைத்துவிட்டால், தரம் பிரிக்காத, 100 டன் அளவு கழிவை கையாளும் எம்.ஆர்.எப்., மையம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. தற்போது, குப்பை தேக்கத்தை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் குப்பை சேகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அந்தந்த மண்டலங்களில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களையும்(எம்.சி.சி.,) முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் குப்பையை சரியாக தரம் பிரித்து, குப்பை மேலாண்மையில் இருக்கும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய திட்டங்களையும் மாநகராட்சி வகுத்துவருகிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
'ஸ்மார்ட் சிட்டி 2.0' திட்டத்தில் ரூ.135 கோடி நிதியில் 'பயோ காஸ் பிளான்ட்' உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த விண்ணப்பித்துள்ளோம். தற்போது, மத்திய மண்டலத்தில் உள்ள ஐந்து எம்.சி.சி., மையங்களில் ஒன்று செயல்படவில்லை.
கிழக்கு மண்டலத்தில் இரு மையங்களில் ஒன்றும், வடக்கில் உள்ள மூன்று மையங்களில் இரண்டும், தெற்கு மண்டலத்தில் நான்கில் ஒன்றும், மேற்கில் எட்டில் இரண்டும் செயல்படவில்லை. ஆட்கள் பற்றாக்குறை, உபகரணங்கள் பழுது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு முழு மையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

