/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி., கல்லுாரியில் ரஷ்ய கலாசார திருவிழா
/
கே.ஐ.டி., கல்லுாரியில் ரஷ்ய கலாசார திருவிழா
ADDED : ஜன 24, 2024 01:41 AM

கோவை:கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி (கே.ஐ.டி.,) மற்றும் இந்தோ- ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில் துறை சார்பில், 'ரஷ்ய கலாசார திருவிழா', கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவில், ரஷ்யாவைச் சேர்ந்த 19 நடனக் கலைஞர்கள், ரஷ்ய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை சித்தரிக்கும், 23 வகையானநடனங்களை நிகழ்த்தினர். இது, ரஷ்யவரலாறு, வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.
இந்திய - ரஷ்ய வர்த்தகம் மற்றும் தொழில் சங்க பொதுச்செயலாளர் தங்கப்பன், கல்லுாரியின் நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து, முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

