/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை
/
அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை
ADDED : ஜன 20, 2024 08:32 PM

கோவைl;குடியரசுதின விழாவை முன்னிட்டு, கோவை கோட்டத்திலுள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை நேற்று துவங்கியது.
கடந்த 2022ல், நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தின் அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
அனைவருக்கும் தேசியக் கொடி எளிதில் கிடைக்கும் வகையில், அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடர்ந்து நடக்கிறது.
கோவை கோட்டத்தில், குடியரசு தின தேசியக்கொடி விற்பனை, கூட்செட் ரோடு, கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் நேற்று துவங்கப்பட்டது.
தலைமை அஞ்சல் நிலைய, முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு விற்பனையை துவக்கி வைத்தார். தேசியக்கொடியின் விலை, ரூ.25.
கோவை அஞ்சல் கோட்டத்தில், ஆர்.எஸ்.புரம், கோவை சென்ட்ரல், கணபதி, சிங்காநல்லுார், பீளமேடு, ராமநாதபுரம், ராம்நகர் மற்றும் முக்கிய அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடியை பெற்றுக்கொள்ளலாம் என, முதுநிலை அஞ்சல் அதிகாரி தெரிவித்தார்.

