/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள் தேர்வு
/
நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள் தேர்வு
ADDED : ஜன 18, 2024 10:22 PM
உடுமலை, -மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மாவட்ட நேருயுவ கேந்திராவுக்கு, தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர்களாக, திருப்பூரைச்சேர்ந்த அருண், சண்முகம் என, இருவர் தேர்வாகி உள்ளனர்.
ரயில்வே மேம்பாட்டு ஆலோசனைக் குழுவில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில அரசு பிரதிநிதிகள், ரயில் பயணிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பலர் இடம் பெற்று இருப்பர்.
இக்குழு பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, ஆலோசனையை வழங்குவார்கள்.
அவ்வகையில், தெற்கு ரயில்வேக்கு பயணியருக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து, ஆலோசனை வழங்கும் வகையில், குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரை சேர்ந்த, பாலசுப்ரமணியம் கதிர்வேல், ஆனந்தி, நவசுதன் சிவஆனந்தம் குப்புராஜ், மகேஷ், சுந்தரன் மற்றும் சுதாதேவி என, ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

