/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்மண்டல வூசூ போட்டி; கே.பி.ஆர்., கல்லூரியில் துவக்கம்
/
தென்மண்டல வூசூ போட்டி; கே.பி.ஆர்., கல்லூரியில் துவக்கம்
தென்மண்டல வூசூ போட்டி; கே.பி.ஆர்., கல்லூரியில் துவக்கம்
தென்மண்டல வூசூ போட்டி; கே.பி.ஆர்., கல்லூரியில் துவக்கம்
ADDED : ஜன 19, 2024 04:18 AM
கோவை : தென் மண்டல அளவிலான பெண்கள் வூசூ போட்டி அரசூர் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
தேசிய வூசூ போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் வகையில், மண்டல வாரியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி தெற்கு மண்டலத்துக்கான போட்டி, தமிழ்நாடு வூசூ சங்கம், அஸ்மிதா அமைப்பு மற்றும் கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில் கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கிறது. இப்போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து வூசூ அமைப்பின் தேசிய தலைவர் ஜித்தேந்திரா சிங் பஜ்வா பேசுகையில், ''சப்--ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் வூசூ போட்டியில் பங்கேற்பார்கள்,'' என்றார்.