/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த இன்று சிறப்பு முகாம்
/
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த இன்று சிறப்பு முகாம்
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த இன்று சிறப்பு முகாம்
சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த இன்று சிறப்பு முகாம்
ADDED : ஜன 20, 2024 08:24 PM
கோவை:கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த, இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணமே பிரதான வருவாய்.
நடப்பாண்டு மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறுதல், பரிசீலித்தல், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடத்துதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடத்துதல் உள்ளிட்ட பணிகளால், வரி வசூல் பின்தங்கியது.
வரும் மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதால், வரி வசூலை முடுக்கி விட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல், லட்சக்கணக்கில் நிலுவை வைத்திருக்கும் கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்த கட்டமாக, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி, கிழக்கு மண்டலத்தில், 56, 57வது வார்டுக்கு ஒண்டிபுதுார் சுங்கம் மைதானம், மேற்கு மண்டலத்தில் 75வது வார்டு மாரியம்மன் கோவில் தெரு சீரநாயக்கன்பளையம், 33வது வார்டு ஹவுசிங் யூனிட் பின்புறம் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்படுகிறது.
தெற்கு மண்டலத்தில், 88வது வார்டு குனியமுத்துார் தர்மராஜா கோவில் வளாகம், வடக்கு மண்டலம் 15வது வார்டு சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், மத்திய மண்டலத்தில் 32வது வார்டு சிறுவர் பூங்கா, சங்கனுார் நாராயணசாமி வீதி, 62வது வார்டு பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம்.நகர் தர்கத் இஸ்லாம் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்படுகிறது.
இதேபோல், மார்ச், 31 வரை, மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

