/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் ராமருக்கு சிறப்பு பூஜை
/
சங்கரா கல்லுாரியில் ராமருக்கு சிறப்பு பூஜை
ADDED : ஜன 23, 2024 01:49 AM
கோவை;அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கல்லுாரியின் நுண்கலை மன்ற உறுப்பினர்கள் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மலர்களால் அயோத்தி ராமர் கோவில் தோற்றம் அமைக்கப்பட்டது. அதன்மீது, பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.
ஆசிரியர்கள், மாணவர்கள் நுாறுக்கும் மேற்பட்டோர், ஒவ்வொருவரும் தீபம் ஏற்றி, 'ஸ்ரீ ராம், ஜெய ராம்,ஜெய ஜெய ஜெயராம்' என ஒரு லட்சம் முறை உச்சரித்து வழிபட்டனர்.
சங்கரா கல்வி குழுமங்களின் துணைச் செயலர் கல்யாணராமன், அறங்காவலர் மற்றும் துணை செயலர் நித்யா, துணை இணை செயலர் ராதிகா, முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

