/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கூடைப்பந்து மாணவர்கள் சிறப்பு
/
மாநில கூடைப்பந்து மாணவர்கள் சிறப்பு
ADDED : ஜன 24, 2024 01:26 AM

கோவை;சர்வஜனா பள்ளியில் நடக்கும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பி.எஸ்.ஜி., சர்வஜனா மேல்நிலைப்பள்ளி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு மாவட்ட அளவிலும், கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. போட்டியை, பள்ளி செயலாளர் நாராயணசாமி துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.
இதன் மாணவர் பிரிவில் எட்டு அணிகளும், மாணவியர் பிரிவில் எட்டு அணிகளும் 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் போட்டியிடுகின்றன.
மாணவர் பிரிவில், சென்னை வேலம்மாள், கோவை சபர்பன், பெர்க்ஸ் மற்றும் பி.எஸ்.ஜி., சர்வஜனா ஆகிய அணிகள், லீக் சுற்றுப்போட்டிக்கு முன்னேறின.
மாணவியர் பிரிவில், அல்வேர்னியா 'ஏ' மற்றும் 'பி', பாரதி மெட்ரிக்., மற்றும் பீபால் ஆகிய நான்கு அணிகள், அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

