sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாநில அளவிலான எறிபந்து போட்டி 

/

 மாநில அளவிலான எறிபந்து போட்டி 

 மாநில அளவிலான எறிபந்து போட்டி 

 மாநில அளவிலான எறிபந்து போட்டி 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியில், மாநில அளவிலான எறிபந்து போட்டி நடந்தது.

பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், 50வது பொன்விழா ஆண்டையொட்டி, மாநில அளவிலான மாணவியருக்கான எறிபந்து போட்டிகள், பள்ளி வளாகத்தில் நடந்தது.

பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆண்டனி தலைமை வகித்தார். போட்டியை பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய் மற்றும் ரத்தினம் நினைவு அறக்கட்டளை நிறுவனர் மூகாம்பிகை துவக்கி வைத்தனர்.

போட்டியில், கிருஷ்ணகிரி செயின்ட்ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை பிரசன்டேஷன் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும், விஸ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. கிருஷ்ணகிரி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் பள்ளி நான்காமிடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரத்தினம் நினைவு அறக்கட்டளை நிறுவனர், டபுள் கார்ஸ் மேலாளர் மகேஷ் சந்திரசேகர், முன்னாள் மாணவர் பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பள்ளி பொருளார் அருட்தந்தை நிமீஸ், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் விஜய், சவுமியா ஆகியோர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar