/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில வாலிபால் போட்டி; இந்தியன் வங்கி முதலிடம்
/
மாநில வாலிபால் போட்டி; இந்தியன் வங்கி முதலிடம்
ADDED : ஜன 19, 2024 04:16 AM
கோவை : தடாகத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி முதலிடம் பிடித்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதடாகம் மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் 14ம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி தடாகம் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது.
இப்போட்டியில் மாநிலத்தின் சிறந்த அணிகளான சென்னை இந்தியன் வங்கி, சென்னை தமிழ்நாடு போலீஸ், கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ், சென்னை தெற்கு ரயில்வே ஆகிய நான்கு அணிகள் பங்கேற்று லீக் முறையில் போட்டியிட்டன.
இதில், இந்தியன் வங்கி அணி முதல் போட்டியில், 3 -1 என்ற செட் கணக்கில் மெட்ரோ பிரண்ட்ஸ் அணியையும், இரண்டாம் போட்டியில் 3 -1 என்ற செட் கணக்கில் தெற்கு ரயில்வே அணியையும், மூன்றாம் போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணியை 3 - 0 என்ற நேர் செட் கணக்கிலும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது.
தொடர்ந்து, தமிழ்நாடு போலீஸ் அணி தெற்கு ரயில்வே அணியை 3 - 0 என்ற செட் கணக்கிலும், மெட்ரோ பிரண்ட்ஸ் அணியை 3 - 0 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி இரண்டாமிடத்தையும், மெட்ரோ பிரண்ட்ஸ் அணி, தெற்கு ரயில்வே அணியை 3 - 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒரு வெற்றியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

