/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பில் களமிறங்கிய மாணவர்கள்
/
பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பில் களமிறங்கிய மாணவர்கள்
ADDED : ஜன 13, 2024 11:08 PM

கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் எம்.எஸ்.டபிள்யூ., மாணவர்களின் பாடத்திட்ட களஆய்வில், பெரிய சவால்ஆக கண்டது பிளாஸ்டிக் கழிவுகள்தான்.
இதற்கு தீர்வுகாணும் வகையில், பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து வளாகத்திலேயே பிளாஸ்டிக் கார்னர் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, கல்லுாரி சமூக ஈடுபாடு பிரிவு மேலாளர் சண்முகப்பிரியா கூறியதாவது:
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியில், 2023 ஜூலை முதல் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க துவங்கினோம்.
எம்.எஸ்.டபிள்யூ., படிக்கும் 200 மாணவர்களுக்கு, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து, மறுசுழற்சியின் அவசியம், பிளாஸ்டிக் சேகரிப்பு குறித்து பயிற்சி அளித்தோம். அவர்கள் வாயிலாக, கல்லுாரி மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்கள், தங்கள் வீடுகள், பள்ளிகள், உணவகங்கள், கோவில்கள், சுற்றுலாதலங்கள் என பல்வேறு பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் சேகரித்து வந்துள்ளனர். தன்னார்வலர்களின் உதவிகளையும் இதில் பெற்றுள்ளோம்.
இதுவரை, 55 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வளாகத்தில் சேகரித்து வைத்துள்ளோம். விரைவில் இதனை மறுசுழற்சி செய்து, பிளாஸ்டிக் கழிவுகளை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'பிளாஸ்டிக் கார்னர்' எனப்படும், பிரத்யேக கட்டமைப்பை வடிவமைக்கவுள்ளோம். பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சியில், பெங்களூரில் ஒரு கல்லுாரி 39 முதல் 40 டன் சேகரித்து, சாதனை புரிந்துள்ளது. அவர்களை விட அதிகம் சேகரித்து, மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

