நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு கலை கல்லுாரி, என்.ஜி.எம்., கல்லுாரி நுாலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., சட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார்.தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., வினர் கூறுகையில், 'முதல்வர் ஸ்டாலின், 'முத்தமிழறிஞர் பதிப்பகம்' துவக்கி வைத்து, ஒன்பது நுால்கள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டார். இது கல்லுாரிக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, ஒன்பது நுால்கள், கல்லுாரி நுாலகங்களுக்கு வழங்கப்பட்டன,' என்றனர்.

