/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 ஆண்டுகளில் 100 பாலங்கள் இலக்கு! கேரள அமைச்சர் பேச்சு
/
5 ஆண்டுகளில் 100 பாலங்கள் இலக்கு! கேரள அமைச்சர் பேச்சு
5 ஆண்டுகளில் 100 பாலங்கள் இலக்கு! கேரள அமைச்சர் பேச்சு
5 ஆண்டுகளில் 100 பாலங்கள் இலக்கு! கேரள அமைச்சர் பேச்சு
ADDED : ஜன 23, 2024 11:46 PM
பாலக்காடு;கேரளாவில், ஐந்து ஆண்டுகளில், 100 பாலங்கள் கட்டி முடிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். ஆனால், 32 மாதத்தில் அரசு, 84 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, என, பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் அருகே உள்ள தென்னிலாபுரத்தில், மங்கலம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட பாலம் திறந்து விழா நடந்தது. தரூர் எம்.எல்.ஏ., சுமோத் தலைமை வகித்தார். ஆலத்தூர் வட்டார பஞ்சாயத்து தலைவர் ரஜனி, கண்ணம்பிரை, காவச்சேரி ஊராட்சி தலைவர்கள் சுமதி, ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் பேசியதாவது:
வளர்ச்சி பணியால் ஏற்படும் மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பான பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. 9.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தால், மக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில், 100 பாலங்கள் கட்டி முடிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். ஆனால், 32 மாதத்தில் அரசு, 84 பாலங்கள் கட்டி உள்ளது. 10 பாலங்களின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இது அரசின் சாதனையாகும். இவ்வாறு, அவர் பேசினார்.

