/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சில் தாய் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தந்தை!
/
பஸ்சில் தாய் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தந்தை!
பஸ்சில் தாய் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தந்தை!
பஸ்சில் தாய் விட்டுச் சென்ற குழந்தையை தேடி வந்த தந்தை!
ADDED : ஜன 23, 2024 01:31 AM
கோவை;பஸ்சில் தாய் விட்டு சென்ற குழந்தையை, தேடி வந்த தந்தையிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் திவ்யா. கோவையில் தங்கி ஆடிட்டிங் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளியன்று, சொந்த ஊர் செல்ல, காந்திபுரத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது அருகில் குழந்தையுடன் நின்றிருந்த பெண் ஒருவர் தன்னிடம் இருந்த, 5 மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார்.
ரயில்வே ஸ்டேஷனில், திவ்யா குழந்தையின் தாயை தேடிய போது காணவில்லை. அதிர்ச்சி அடைந்த திவ்யா கண்டக்டரிடம் தெரிவித்தார்.
கண்டக்டரும் தேடினார். அந்தப் பெண் இல்லை. தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வாயிலாக குழந்தை, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு வார்டில் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பஸ்சில் இளம்பெண் விட்டுச் சென்ற குழந்தை தன்னுடையது என்று கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ராஜேந்திரன், 32, என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
நானும், திருச்சியைச் சேர்ந்த திவ்யா, 30, என்பவரும், காதல் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் சுந்தராபுரத்தில் வசித்து வந்தோம். காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, எனது தந்தை சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது இறப்புக்கு என் காதல் திருமணமே காரணம் என உறவினர்கள் கூறினர். இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், நான் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தபோது, என் மனைவி குழந்தையை பஸ்சில் விட்டு சென்றுள்ளார்.
இவ்வாறு, அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனிடம், குழந்தை குறித்த விபரங்கள், ஆவணங்களை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

