/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம்; வழக்கமான பணிகள் பாதிப்பு
/
வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம்; வழக்கமான பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம்; வழக்கமான பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறையினர் தொடர் போராட்டம்; வழக்கமான பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 23, 2024 11:34 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், இரண்டாவது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின்படி, அடிப்படையில் விதித்திருந்த உத்தரவை வெளியிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட போராட்டமாக, கடந்த, 13ம் தேதி ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். நேற்று, இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள அலுவலர்கள், 45க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், வழக்கமான பணிகள் பாதித்துள்ளன.
வரும், 26ம் தேதியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடும் அலுவலர்கள், 27ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

