/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
/
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க முனைப்பு 2014, 2019 தேர்தல்களை ஒப்பிட்டால் அதிர்ச்சி
ADDED : பிப் 02, 2024 12:14 AM
கோவை:கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், 63.84 சதவீத ஓட்டுகளே பதிவானது. இது, 2014ல் நடந்த தேர்தலை காட்டிலும், 4.33 சதவீதம் குறைவு. அதனால், நடப்பாண்டு நடைபெற உள்ள தேர்தலில், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
சமீபத்தில் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், கோவை லோக்சபா தொகுதியில், 20.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, 19.58 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அதனுடன், தற்போது, ஒரு லட்சத்து, 25 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்திருக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வாக்காளர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்.
ஓட்டு சதவீதம் குறைவு
அதேநேரம், 2014ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2019ல், 2 லட்சத்து, 38 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். அத்தேர்தலில், 78 ஆயிரம் ஓட்டுகளே கூடுதலாக பதிவாகி இருந்தது.2014 தேர்தலில் பதிவான ஒட்டுப்பதிவு சதவீதத்தை, 2019 தேர்தலுடன் ஒப்பிட்டால், 4.33 சதவீதம் குறைந்திருந்தது. அதாவது, 12.50 லட்சம் வாக்காளர்களே ஓட்டளித்திருந்தனர். 7.08 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. மொத்தம், 63.84 சதவீத ஓட்டுகளே பதிவாகியிருந்தது.
தவறில்லாத பட்டியல்
இறந்தவர்கள் பெயர் நீக்கம், ஒருவருக்கே இரண்டு இடங்களில் ஓட்டுரிமை உள்ளிட்ட பல்வேறு தவறுகள் இன்னும் நீடிப்பதால், நுாறு சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் இன்னும் தயாரிக்க முடியாத நிலை இருக்கிறது. அதன் காரணமாக, அதிகபட்சமாக, 80 சதவீத ஓட்டுகள் பதிவாவதற்கு, தேர்தல் ஆணையம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்கிற எதிர் பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதற்கு ஓட்டுப்போட வேண் டியதன் அவசியத்தை வாக்காளர்களிடம் உணர வைத்து, ஓட்டுச்சாவடிக்கு வரவழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது. இதற்கு, தேர்தல் ஆணையம் முனைப்பு காட்ட வேண்டும்.
ஓட்டுச்சாவடிகள் ஆய்வு
இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
கோவையில், 30 சதவீதம், 40 சதவீதம், 50 சதவீதம் என, குறைவான ஓட்டுகள் பதிவான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்திருக்கிறோம். இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் வந்து ஓட்டுப்போட முடியாததற்கு என்ன காரணம்; என்ன பிரச்னை ஏற்படுகிறது; துாரம் அதிகமாக இருக்கிறதா என ஆய்வு செய்திருக்கிறோம்.
'கேட்டடு கம்யூனிட்டி'யாக வசிக்கும் பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைந்திருக்கிறது. ஓட்டுப்பதிவை அதிகரிக்க, வீதி பிரசாரம் செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம். இதன் ஒரு பகுதியாக, ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மூலம் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருக்கிறோம். நகரில் பிரபலமாக இருப்பவர்கள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம்.
மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உதவியாளர்களது ஓட்டை எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

