/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு
ADDED : ஜன 19, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை : ஆனைமலை அருகே, சமத்துாரை சேர்ந்த ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர் சுரேஷ்குமார்,36. இவர், கடந்த, 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 22 பவுன் நகை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

