/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 14, 2025 11:35 PM
உயர்ந்த பக்தி எது?
டெப்ரி இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில், ராம்நகர், ராமர் கோவிலில், அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை நிகழ்ச்சி நடக்கிறது. ரகுநாத்தாஸ் மஹராஜ் 'உயர்ந்த பக்தி எது?' என்ற தலைப்பில் ஹரிகதை வழங்குகிறார்.
அந்தோணியார் ஆலய திருவிழா
புலியகுளம், அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழாவில், இன்று காலை, 8:00 மணி முதல், நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல், ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெறும். இரவு, 10:00 மணிக்கு, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
ரத்த தான விழிப்புணர்வு
சர்வதேச உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, ரத்த தான விழிப்புணர்வு பைக் ரேலி நடக்கிறது. வ.உ.சி., மைதானம் அருகே, நேரு ஸ்டேடியத்தில் காலை, 8:00 மணிக்கு பைக் ரேலி துவங்குகிறது.
மாபெரும் விதைத்திருவிழா
தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கே.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், மாபெரும் விதைத்திருவிழா நடக்கிறது. சிங்காநல்லுார், கே.எஸ்.ஜி., கலை கல்லுாரியில், காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கும் விழாவில், அனைவரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
ஷாப்பிங் திருவிழா
அவிநாசி ரோடு, கொடிசியா வளாகத்தில் 'கோவை பஜார்' மாபெரும் ஷாப்பிங் கண்காட்சி காலை, 10:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது.120க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், வீட்டுக்கு தேவையான பொருட்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், புகைப்படங்கள் கண்காட்சியும் நடக்கிறது.
அர்ச்சுனன் தவம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், உபன்யாசம் மற்றும் வில்லி பாரதம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று காலை, 10:00 மணிக்கு அர்ச்சுனன் தவம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது.
துவக்க விழா
நவாவூர் பிரிவு, திருவள்ளுவர் வீதியில்,ரக் ஷா முதியோர் இல்லத்தின், 32ம் ஆண்டு துவக்க விழா நடக்கிறது. துவக்க விழாவையொட்டி, காலை, 10:30 மணி முதல், பல்வேறு நிகழ்வுகள் முதியோர் இல்ல வளாகத்தில் நடக்கிறது.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
ஆசிய ஜூவல்ஸ் கண்காட்சி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஆசிய ஜூவல்ஸ் நகை கண்காட்சி மற்றும் விற்பனை அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர்சில் நடக்கிறது. இந்தியாவின் சிறந்த, 50 நகைக்கடைகளில் இருந்து விலை மதிப்பற்ற மற்றும் மிக அழகான நகைகள் காட்சிப்படுத்தபட்டுள்ளன. காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.