/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் முன்பதிவு டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை
/
ரயில் முன்பதிவு டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை
ADDED : செப் 26, 2025 05:51 AM
கோவை; ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை வேறொருவர் பெயரில் புரோக்கர்கள் முன்பதிவு செய்கின்றனர். இந்த டிக்கெட்டுகளை, கடைசி நேரத்தில் பயணிக்கத் திட்டமிட்டுச் செல்லும் பயணிகளிடம் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.
அதனால், கவுன்டரில் நேரடியாக டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,) கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆர்.பி.எப்., போலீசார் கூறுகையில், 'ஆர்.பி.எப்.,ல் உள்ள கம்ப்யூட்டர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், டிக்கெட் முன்பதிவு முறைகளை ஆராய்கிறோம். அனுமதியற்ற டிக்கெட்டுகளை கண்டறிந்தால் பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கைது செய்கிறோம்.
'கடந்த 7 மாதங்களில் ஆறு வழக்குகள் பதிந்து, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். முன்பதிவு மற்றும் டிக்கெட் கவுன்டர்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, கள்ள டிக்கெட்டுகள் விற்பனையை தடுக்கிறோம்.
'இதுகுறித்து ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது' என்றார்.