/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதவணையில் தண்ணீர் தேக்கியதால் குடிநீர் திட்டங்களுக்கு பற்றாக்குறை
/
கதவணையில் தண்ணீர் தேக்கியதால் குடிநீர் திட்டங்களுக்கு பற்றாக்குறை
கதவணையில் தண்ணீர் தேக்கியதால் குடிநீர் திட்டங்களுக்கு பற்றாக்குறை
கதவணையில் தண்ணீர் தேக்கியதால் குடிநீர் திட்டங்களுக்கு பற்றாக்குறை
ADDED : மார் 25, 2025 10:00 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக ஓடும் பவானி ஆறு, பவானிசாகர் அணைக்கு செல்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை மூளையூர் வரை, பவானி ஆற்றில் இருந்து, 17 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதன் வாயிலாக காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஆறு ஊராட்சிகள், சிறுமுகை பேரூராட்சி, அன்னுார், அவிநாசி, சூலுார், மோப்பிரிபாளையம் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் உள்ள, பல லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் கரட்டுமேட்டுக்கும், ஊமப்பாளையத்திற்கும் இடையே பவானி ஆற்றின் குறுக்கே, மின்சாரம் உற்பத்தி செய்ய கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில், 30 அடிக்கு தண்ணீரை தேக்கி வைத்தால் தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போது, பில்லுார் அணையில், 85 அடிக்கு தண்ணீர் இருப்பதால், கோவை மாநகராட்சி குடிநீர் திட்டங்களுக்கு, தண்ணீர் தேக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்ய, தண்ணீர் சரியாக திறந்து விடுவதில்லை. அதனால் பவானி ஆற்றில் நீரோட்டம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஊமப்பாளையம் கதவணையில் தண்ணீர் தேக்கி வைப்பதால், பவானி ஆற்றை நம்பியுள்ள, குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.