/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இணையதள சர்வரில் கோளாறு; மீண்டும் பதிவேற்ற வாய்ப்பு
/
இணையதள சர்வரில் கோளாறு; மீண்டும் பதிவேற்ற வாய்ப்பு
இணையதள சர்வரில் கோளாறு; மீண்டும் பதிவேற்ற வாய்ப்பு
இணையதள சர்வரில் கோளாறு; மீண்டும் பதிவேற்ற வாய்ப்பு
ADDED : பிப் 24, 2024 12:10 AM
கோவை;தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின், tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில், சர்வர் பழுது ஏற்பட்டதால், பாதிப்புக்குள்ளானஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை, கடந்த ஆண்டு டிச.,2ம் தேதிக்கு முன் சமர்ப்பித்தவர்கள், மீண்டும் பதிவேற்றம் செய்யலாம்.
அதற்கு வசதியாக, கோவை ராமநாதபுரம் திருச்சி சாலை, 1847 என்ற கதவு எண்ணில் இயங்கிவரும் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில், விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பித்து, பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இத்தகவலை, கோவை தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.