/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவி கொலை, கணவர் தற்கொலை முயற்சி; கூடலுார் போலீசார் விசாரணை கோவையில் சிகிச்சை : கூடலுார் போலீசார் விசாரணை

ADDED : பிப் 01, 2024 10:23 PM
கூடலுார்:கூடலுார் அருகே, பழங்குடி கிராமத்தில், மனைவியை கொலை செய்து விட்டு, கணவன் தற்கொலை முயற்சி செய்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை கவுண்டங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி,30. பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
இவர் மனைவி சாந்தி,30, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தார். ரவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சாந்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறியதால், போலீசார் அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனை கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முயன்ற ரவியை மீட்டு சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, இரவு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத், எஸ்.ஜ., கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். சாந்தி உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், 'அவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்,' என, தெரிய வந்தது. கொலை குறித்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ரவியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'சாந்தி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை ரவி செய்து இருக்கலாம். இது தொடர்பான ரவியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
சிகிச்சைக்கு பின், மீண்டும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பின்பே, கொலைக்கான உண்மை தெரிய வரும்,' என்றனர்.