/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நகை கொள்ளை குஜராத்தில் வாலிபர் கைது
/
கோவையில் நகை கொள்ளை குஜராத்தில் வாலிபர் கைது
ADDED : ஜன 24, 2024 01:34 AM

தொண்டாமுத்துார்:கோவை, குரும்பபாளையம், ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பரமேஸ்வரி, 54. இவரது கணவர் சீனிவாசன், மகன் துபாயில் பணிபுரிகின்றனர். மகள், திருமணமாகி கனடாவில் வசிக்கிறார். கடந்த 13ம் தேதி துபாய் சென்று திரும்பிய பரமேஸ்வரி, வீட்டு பீரோவில் இருந்த, 47 சவரன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொண்டாமுத்துார் போலீசார் விசாரித்து வந்தனர். சம்பவ இடத்தில் கைப்பற்றிய கைரேகைகளை வைத்து, குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் கும்பல் தான், கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான, 11 பேர் தனிப்படை போலீசார், குஜராத் மாநிலம் விரைந்தனர். குஜராத் மாநிலம், தாகோத் மாவட்டம், குல்பார் மலை கிராமத்தில் தங்கி கண்காணித்து வந்தனர்.
வீட்டில் பதுங்கி இருந்த, கொள்ளை கும்பலை சேர்ந்த காஜுபாய், 44, என்பவரை கைது செய்து, நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து, 7.47 லட்சம் ரூபாய், 23 கிராம் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

