ADDED : செப் 26, 2025 05:11 AM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கவிநிலவன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறவன்குப்பம் பகுதியில் நின்று கொண்டிருந்த 11 பேர் கொண்ட கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், குறவன்குப்பம் மோகன சுப்பரமணியன் மகன் சிவகுரு,24; ஸ்ரீமுஷ்ணம் பிலிப்ராஜ் மகன் ஜான் சுதர்ஷன்,21; மேல்பாதி சேட்டு மகன் குணால்பாண்டி,23; பெரியாக்குறிச்சி ராஜேந்திரன் மகன் ராஜசேகரன்,29; வடலுார் ராமலிங்கம் மகன் ஹரிஷ்,28; ஆனந்தகுமார் மகன் சூரியா,24; பீட்டர் மகன் அபிராஜ்,22; கரைமேடு முத்தையன்,39, மேல்பாதி அருள்செல்வன் மகன் சூரியா,19; கார்குடல் பிரபாகரன் மகன் சின்னா,19; மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரிந்தது.
இவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 11 பேரையும் கைது செய்து, பட்டா கத்தி, இருசக்கர வாகனம்-3 மற்றும் 44 கிராம் கஞ்சாவை கைது செய்தனர்.