/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ் - டிராக்டர் மோதல் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்
/
அரசு பஸ் - டிராக்டர் மோதல் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்
அரசு பஸ் - டிராக்டர் மோதல் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்
அரசு பஸ் - டிராக்டர் மோதல் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்
ADDED : ஜன 14, 2024 06:21 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு பஸ்சும், டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று மதியம் 50 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தெள்ளார் சங்கர், 49; ஓட்டினார். மாலை 3 மணிக்கு, திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரி அருகே வந்தபோது, எதிரே பாதாள சாக்கடை திட்ட பணிக்கு மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதியது.
இதில், அரசு பஸ் முன்பகுதி நொறுங்கியது. விபத்தில், டிராக்டர் டிரைவர் கொணக்கம்பட்டு உதயகுமார், 35; துாக்கி வீசப்பட்டார். அரசு பஸ் டிரைவர் சங்கர், கண்டக்டர் பிரகாஷ் மற்றும் பயணிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் விரைந்து சென்று, இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த டிரைவர் சங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து காரணமாக திண்டிவனம் - சென்னை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

