/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு அரசு பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
/
நடுவீரப்பட்டு அரசு பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2025 12:19 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 அரசு பொது தேர்வில் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 125 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளி அளவில் மாணவிகள் தர்ஷினி 546 மதிப்பெண் பெற்று முதலிடம், சுவாதி 529 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பிரியா 527 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி பாராட்டினர்.
சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கோகுலகிருஷ்ணன் 567 மதிப்பெண், ரம்யா 559 மதிப்பெண், கீர்த்தனா 535 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்ச்சி சதவீதம் 91 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் அமுதா பாராட்டினார்.
பாலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கனிமொழி 551 மதிப்பெண், நவிதா 515 மதிப்பெண், ,கலைச்செல்வி 503 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்ச்சி சதவீதம் 91 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் அன்னபூரணி பாராட்டினார்.
பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் காவியா 519 மதிப்பெண், வினோதனா 505 மதிப்பெண், விஜயலட்சுமி 496 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்ச்சி சதவீதம் 90 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் பாலாம்பிகை பாராட்டினார்.