/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்ணுத்தோப்பு பாலத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு
/
கண்ணுத்தோப்பு பாலத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு
கண்ணுத்தோப்பு பாலத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு
கண்ணுத்தோப்பு பாலத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜன 21, 2024 04:48 AM

வடலுார்: வடலுார் - பண்ருட்டி சாலையில், கண்ணுத்தோப்பு பாலத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வாக, தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
வடலுார் -பண்ருட்டி சாலையில் பழமையான குறுகிய கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இப்பாலம் தற்போது சேதமடைந்து, குறுகிய பாலமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பாலத்தின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், பாலத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், எஸ்.பி., ராஜா ராம் முயற்சியால், கலெக்டர், என்.எல்.சி., நிறுவனம் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை உதவியுடன் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் புதியதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதியில் நடைபெறும் தைப்பூச திருவிழா நேரத்தில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

