/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் அதிரடி சோதனை; 13 விதிமீறல் ஆட்டோக்கள் பறிமுதல்
/
சிதம்பரத்தில் அதிரடி சோதனை; 13 விதிமீறல் ஆட்டோக்கள் பறிமுதல்
சிதம்பரத்தில் அதிரடி சோதனை; 13 விதிமீறல் ஆட்டோக்கள் பறிமுதல்
சிதம்பரத்தில் அதிரடி சோதனை; 13 விதிமீறல் ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : பிப் 24, 2024 06:19 AM

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் விதிமீறிய ௧௩ ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், தகுதிச்சான்று பெறாமலும் அதிக அளவில் குழந்தைகளை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்தது.
இதனையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா, நேற்று திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 13 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறுகையில், பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களுக்கு போக்குவரத்து ஆணையர் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர இருப்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என எச்சரித்தார்.

