/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 10:26 PM

திட்டக்குடி : தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக் குடி பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்டக்குழு சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், இந்திய கம்யூ., மாவட்ட குழு ரமேஷ், நல்லுார் ஒன்றிய துணை செயலாளர் சின்னத்தம்பி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், ஆட்டோ சங்க மாவட்டசெயலாளர் சிவப்பிரகாஷ், விவசாய சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட்டு, விவசாய தொழி லாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிக்கும் 100நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலை அட்டையுடன், ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

