ADDED : செப் 09, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரத்தில், பெட்டிக் கடையில் மதுபாட்டில் விற்பனை செய்வரை போலீசார் கைது செய்னர் .
சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், பெட்டிக்கடையில் பார் நடத்தி, மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)அம்பேத்கர் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பஸ் ஸ்டாண்ட் எதிரில் எடத்தெருவைச் சேர்ந்த செல்வம்,48; என்பவரது கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

