ADDED : பிப் 02, 2024 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சேத்தியாத்தோப்பில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த கிளாங்காடு சென்னி நத்தம் மற்றும் கூளாப்பாடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர் தீபா, புள்ளியல் ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோர் கிராமங்களில் சாதி வேற்றுமையை கலைந்து ஒற்றுமையை வளர்ப்பது,வன்கொடுமை கள் தடுப்பு மற்றும் வன்கொடுமையால் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சமூக நீதி பிரிவு எஸ்.ஐ., பாலசந்தர், ஊராட்சி தலைவர்கள் கிளாங்காடு சென்னிநத்தம் பழனி, பாலமுருகன் பங்கேற்றனர்.

