/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
/
புவனகிரி அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜன 23, 2024 05:25 AM

புவனகிரி : புவனகிரி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிேஷகம நடந்தது.
புவனகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குலதெய்வ வழிபாட்டினர், மயான சூறை, மாதந்திர ஊஞ்சல் உற்சவ குழுவினர், விழாக்குழுவினர் அமைத்து, கோவில் புதுப்பிக்கப்பட்டது. புதிய விக்ரகங்கள், கொடி மரம் உள்ளிட்டவை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதையடுத்து நேற்று காலை கும்பாபிேஷகம் நடந்தது. கடம் புறப்பாடு துவங்கி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கோபுரத்தில் காலை 10:10 மணிக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகம் நடத்தி வைக்கப்பட்டது.
அறநிலையத்துறை கடலூர் மண்டல இணை ஆணையர் பரணிதரன், துணை ஆணையர் நாகராஜ், உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் சுபாஷினி, செயல் அலுவலர் சரண்யா, விழா குழு ஒருங்கிணைப்பாளர் ரத்தினசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புவனகிரி பேரூராட்சி சேர்மன் கந்தன், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை ஏற்பாட்டில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

