ADDED : ஜூன் 22, 2025 01:59 AM

கடலுார்: கடலுாரில் மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
சங்க தலைவர் பேராசிரியர் குழந்தைவேலனார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, இணை செயலாளர் பாஸ்கரன், துணைத்தலைவர்கள் சிவகுமாரன், சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் ராம ஜெகதீசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி கிருஷ்ணசாமி, சிங்காரம் எழுதிய 'வண்ண நிலா' என்ற நுாலை வெளியிட டாக்டர் பிரவீன் அய்யப்பன், வழக்கறிஞர் சந்திரசேகரன் பெற்றுக் கொண்டனர். ஓய்வு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி பேசினார்.
நுால் ஆசிரியர் சிங்காரம் ஏற்புரையாற்றினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன், தமிழ்ச்சங்க துணைத்தலைவர் ராஜதுரை, பொருளாளர் ரவி, அனைத்து குடியிருப்போர் நலச்சங்க சிறப்பு தலைவர் மருதவாணன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.