/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் பார்க்கிங் இடமாகிய பஸ் நிலைய நுழைவு வாயில்
/
கார் பார்க்கிங் இடமாகிய பஸ் நிலைய நுழைவு வாயில்
ADDED : ஜன 23, 2024 11:20 PM

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, மதுரை, கோவை, பழனி, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், அரியலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ் நிலையத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் நுழைவு வாயிலின் இருபுறமும் தனியார் சிலர் தங்களின் கார்களை நிறுத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு, ஜங்ஷன் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பஸ் நிலை வளாகத்திற்குள் கார்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

