/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபானம் கடத்திய 10 பேர் மீது வழக்கு
/
மதுபானம் கடத்திய 10 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 14, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுபான கடத் தலை தடுக்க, கடலுார் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில், புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த வாகனங்களில் 5க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கடத்தி வந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

