/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது இடத்தில் மதுகுடித்த 14 பேர் மீது வழக்கு
/
பொது இடத்தில் மதுகுடித்த 14 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2024 08:01 AM
புவனகிரி: புவனகிரியில் போக்குவரத்திற்கு இடையூறாக மது குடித்த 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புவனகிரி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக பல்வேறுப்பகுதிகளில் மதுகுடித்தனர்.
அந்த வகையில் கீழ்புவனகிரி சுரேந்தர், சாத்தப்பாடி கொலஞ்சியப்பன், ஜெகதீசன், தச்சக்காடு ராம்கி, எண்ணை நகரம் வெங்கடேசன், சித்தேரி ராஜசேகரன், முள்ளிப்பள்ளம் ஜோதிமணி, வேல்முருகன், இளையராஜா குறியாமங்கலம் செம்பையன், பாவாடை தெற்குதெட்டை சத்தியமூர்த்தி, வயலுார் சூர்யா, வையூர் சிவசக்தி ஆகிய 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

