/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை சிதம்பரத்தில் பயங்கரம்
/
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை சிதம்பரத்தில் பயங்கரம்
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை சிதம்பரத்தில் பயங்கரம்
உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை சிதம்பரத்தில் பயங்கரம்
ADDED : ஜன 19, 2024 07:31 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (எ) அருண்பாண்டியன்,28; திருமணமாகி, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த அருண்பாண்டியன், நேற்று முன்தினம் இரவு 1:00 மணியளவில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த அண்ணாமலை நகர் போலீசார், அருண்பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து அருகில் இருந்த வீட்டின் முன் சென்று நின்றது.
போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது: விடுமுறை தினமான நேற்று முன்தினம் இரவு அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, சந்திரமலை பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1:00 மணிக்கு அங்கு வந்த அண்ணாமலை நகர் திடல் வெளியை சேர்ந்த சதீஷ், முன்விரோதம் காரணமாக அருண்பாண்டியன் தலையை கத்தியால் வெட்டி துண்டித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் தலைமறைவான சதீஷை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

