/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சின்னநற்குணம் சாலைக்கு தீர்வு
/
அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சின்னநற்குணம் சாலைக்கு தீர்வு
அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சின்னநற்குணம் சாலைக்கு தீர்வு
அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சின்னநற்குணம் சாலைக்கு தீர்வு
ADDED : ஜன 19, 2024 07:59 AM
சேத்தியாத்தோப்பு: சின்னநற்குணம் சாலை பணி துவங்கி கிடப்பில் போடப்பட்டதால் இந்திய.கம்யூ., அறிவித்த போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணம் ஊராட்சியில் 3 வார்டில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொத்திப்போடப்பட்ட சாலை புதிய தார்சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் நாளை (20 ஆம் தேதி) சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சாலை மறியலில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று பகல் 1.00 மணியளவில் புவனகிரி தாலுகாக அலுவலகத்தில், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகி குப்புசாமி, சேகர்,ராமலிங்கம் ஆகியோரை அழைத்து தாசில்தார் தமிழ்செல்வி, வட்டாரவளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், சேத்தியாத்தோப்பு சப்இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தையில் சின்னநற்குணம் 3வார்டில் வரும் 31 ஆம் தேதி தார்சாலை அமைக்கும் பணியை துவங்கி பிப்ரவரி மாத இறுதிக்குள் சாலை அமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
மயானத்திற்கு செல்லும் சாலை, தெருவிளக்கு, புதிய வாட்டர் டேங்க் அமைத்து தருதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.போராட்டம் கைவிடப்பட்டது.

