/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு கல்லுாரியில் பருவநிலை பயிலரங்கம்
/
கடலுார் அரசு கல்லுாரியில் பருவநிலை பயிலரங்கம்
ADDED : ஜன 23, 2024 04:58 AM

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் 'எதிர்காலத்தை மேம்படுத்தல்; பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான இளையோர்' என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
சமூகப் பணியியல் துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் பழனிசாமி தில்லை சிவகாமி அறக்கட்டளையுடன் இணைந்து பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கி, பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார். சமூகப் பணியியல் துறைத் தலைவர் சேதுராமன் வரவேற்றார்.
ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டு திட்டத்தின் முன்னாள் திட்ட அலுவலர் சுரேஷ் மரிய செல்வம், யுனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா அலுவலக ஆலோசகர் சுபா ஜெயராம், குழந்தை மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு ஆலோசகர் டாக்டர் பூஜா சங்வி ஆகியோர் காலநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், குழந்தைகளின் உடல்நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர்.
ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஒருங்கிணைப்பு செய்தார். மாணவி ஹேமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
லில்லி மார்க்ரெட் நன்றி கூறினார்.

