/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு
/
வடலுார் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 02, 2024 03:58 AM

வடலுார்: வடலுார் நகராட்சியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கலெக்டர் அருண் தம்புராஜ் கள ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வரின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்டத்தின் கீழ் கலெக்டர் அருண் தம்புராஜ், வடலுார் நகராட்சி ஜோதி நகர் பகுதியில் நேற்று துாய்மை பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு, வீடுகள் தோறும் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது குறித்து ஆய்வு செய்தார்.
ஆபத்தாரணபுரத்தில் வடலுார், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு தயார் செய்யும் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி கமிஷனர் குணசேகரன், துப்புரவு ஆய்வாளர் மோகன் பிரியதர்ஷினி, துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

