/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ஜவான்பவன் அருகில் மத்திய மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அசாம் மாநிலத்தில் காங்., எம்.பி., ராகுல் நடை பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்த வாகனங்களை தாக்கிய பா.ஜ., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளார் ரமேஷ், பொதுச் செயலாளர்கள் கிஷோர், காமராஜ், தொகுதித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, சுந்தரமூர்த்தி, பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய செயலாளர் ரமேஷ், செல்லகுமார், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

